பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்கள் கவினுடன் காதலில் இருந்தவர் நடிகையும், மாடலுமான சாக்ஷி. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு கூட கவினை கடுமையாக விமர்சித்து வந்தார். 

சாக்ஷி மீது கவினுக்கு, ஆரம்பத்தில் ஒரு வித ஈர்ப்பு இருந்தாலும், லாஸ்லியா கவினுடன் நெருங்க துவங்கியதால், சாக்ஷியை கழட்டி விட்டு விட்டு, லாஸ்லியா மேல் அன்பு மழை பொழிந்தார். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் மிகப்பெரிய பிரச்சனையே வெடித்தது.

இது புறம் இருக்க, கவினின் அம்மா உட்பட, அவருடைய குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர், ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்த காரணத்திற்காக தற்போது இவர்களுக்கு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. தன்னுடைய அம்மா கைது செய்யப்பட்ட விஷயம் இதுவரை கவினுக்கு தெரியாது.

இருப்பினும் நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து கவின் மாற்று அவருடைய குடும்பத்தினரை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.  இந்த நிலையில் கவினுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் சாக்ஷி,  தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கவின் குடும்பத்தினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், கவினையும் அவரது குடும்பத்தினரையும் யாரும் விமர்சிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சனையே தவிர, அவருடைய குடும்பத்தினர்களுக்கும் எனக்கும் இல்லை.  எனவே எனது ரசிகர்கள் கவின் குடும்பத்தினருக்கு ஆதரவு அளியுங்கள் என அந்தர் பல்டி அடித்துள்ளார்.