’லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊருக்குக் கிளம்பும்போது அவரிடம் வீட்டு அட்ரஸோ, போன் நம்பரோ கேட்காமல் அப்படியே ஒதுங்கிவிடுவது கவினின் எதிர்காலத்துக்கு நல்லது’என்று கமெண்ட் அடிக்கிறார் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்தர் சந்திரசேகரன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவின் காதல் கதை, லியாவின் பெற்றோர் வருகைக்குப் பின் புதிய ட்விஸ்ட் அடித்துள்ளது. கவினை லாஸ்லியா காதலிப்பதை அவரது பெற்றோர் சுத்தமாக விரும்பவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தனர். குறிப்பால லியாவின் தந்தை ‘வெளிய எங்களுக்கு மானம் போகுது. ‘கேம் ஆட வந்தா அதை மட்டும் செய்யணும்’என்று மிகக்கடுமையாகப் பேசினார்.

இந்நிலையில் கவினை வைத்து ‘நட்புன்னா என்ன தெரியுமா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து  காணொளி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,’ கவின் லொஸ்லியா அப்பா, அம்மா வந்த போது “நான் இதையெல்லாம் நினைத்து பார்க்கவில்லை என்று சொல்கிறார். அப்போ அவர் என்ன, மாமா வாங்க, மருமகனே எப்படியிருக்கீங்க என்று கேட்பார்கள் என்று எதிர்ப்பார்த்தாரா?, நியாயமாக பார்த்தால் கவினை சும்மா எல்லாம் அடிச்சிருக்க கூடாது. கவினுக்கு செருப்படி விழுந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். லாஸ்லியாவின் அப்பா, அம்மா உள்ளே வந்தபோது கவின் மற்றவர்களின் ஆலோசனைகளைக்கேட்டு ‘நான்ங்ககிட்ட போய்ப் பேசட்டுமா? என்று கேட்டதும் ஆனால் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடாமல் பரிதாபமாக உட்கார்ந்திருந்தபோது...கவின் கவின்னு இங்க ஒரு மானஸ்தன் இருந்தானே.அவன எங்கப்பா என்று கேட்கவேண்டும்போல இருந்தது’என்கிறார். 

மேலும் பேசும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தனக்கு இருக்கும் சொந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மட்டுமே ஆர்வம் கொள்ளவேண்டும். அதை விட்டுவிட்டு லாஸ்லியாவிடம் வீட்டு அட்ரஸ் போன் நம்பரெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால் லியாவின் அப்பாவிடம் செம சாத்து வாங்கப்போவது உறுதி என்கிறார்.