கவினுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பல்வேறு ஆர்மிக்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் தொடர்ந்து ரசிகர்கள் ஆக்டிவ்வாக உள்ளனர். அத்துடன், இன்ஸ்டாகிராமில் கவினையும் பல லட்சக்கணக்கானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். 


அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களோ, செய்தியோ வெளியானால் அதை வைரலாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடுவதுதான் கவின் ஆர்மியினரின் முக்கிய வேலையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கவின் வெறியர்களாக அவர்கள் மாறி வருகின்றனர். 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவினின் அடுத்தப் படம் குறித்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் அவரது ஆர்மியினருக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில், கவினின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 ஜிம்மில் தன்னுடைய பயிற்சியாளருடன் இருக்கும் இந்த புகைப்படங்களை, கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "இனி நடக்கப்போற சம்பவம் எல்லாத்துக்கும் இவுங்கதா காரணம்... குட் மார்னிங் கோச்..." என்ற கேப்சனுடன் கவின் பகிர்ந்துள்ள இந்த பகைப்படங்களைப் பார்த்த கவின் ஆர்மியினர் உற்சாகத்தில் சமூக வலைதளத்தையே அதகளப்படுத்தி வருகின்றனர்.

 


"குட் மார்னிங் கோச்" என்ற பிகில் ரெஃபரன்சுடன் மஞ்சள் நிற டி-சர்ட்டில் சிரித்த முகத்துடன் கவின் இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு லைக்சை அள்ளிவீசி வரும் கவின் ஆர்மியினர், அதனை சமூகவலைதளங்களில் வைராக்கி வருகின்றனர். 

தன்னுடைய எதிர்காலத்திட்டத்தின்படியே உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சியில் கவின் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.