பிக்பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினம் லாஸ்லியா கீழே விழுந்ததாலும், அவருக்கு அடிபட்டதாலும் கவின், மற்றவர்கள் மேல் தன்னுடைய கோபத்தை காட்டி வருகிறார். 

முதல் ப்ரோமோவில் லாஸ்லியாவை தள்ளி விட்டதால், சாண்டியிடம் கவின் சண்டை போடும் காட்சி வெளியிடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, வெளியான இரண்டாவது ப்ரோமோவில், கவின் ஓவராக லாஸ்லியா மீது காதலை காட்ட செய்யும் அட்டகாசத்தால்  கடுப்பான ஷெரின் விளையாட்டை விட்டே வெளியேறினார்.

இந்நிலையில் கவின், லாஸ்லியாவிற்காக கொடுக்கும் ஓவர் பில்ட் அப் தாங்க முடியாமல் செம்ம கடுப்பில் ஷெரின் உள்ளே வந்து அமர, அவரை சமாதானம் செய்வதற்காக தர்ஷனும் பின்னாலேயே வருகிறார்.

உள்ளே வந்ததும், இங்கு கேம் விளையாட வந்திருக்கிறார்களா, அல்ல எதற்கு வந்திருக்கிறார்கள். ட்ராமா பன்றாங்க என சூடாக கத்துகிறார். எதற்காக கேம் நிறுத்த வேண்டும். எல்லோரும் அடிவாங்கிக்கொண்டு தானே விளையாடி கொண்டு இருக்கிறோம். இதை ஒரு டாக்டிஸ் மாதிரி விளையாடி கொண்டு இருக்கிறார்கள் இது சரி இல்லை என தன்னுடைய மனதில் உள்ளதை தர்ஷனிடம் கூறுகிறார். 

ஷெரின் சொல்லும் அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த தர்ஷன். ஒரு அழகான பொண்ணுக்கு கோவம் வரலாமா? என்று தர்ஷன் ஒரே ஒரு வார்த்தை சொல்ல, ஷெரின் வெக்கப்பட்டு கொண்டே சிரிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தை கண்டிப்பா யாரும் எதிர்பார்த்திக்க மாட்டார்கள் பாஸ்!

அந்த ப்ரோமோ இதோ: