ஷெரின் பிக்பாஸ் வீட்டை விட்டு, ஒரு சில நிமிடங்களுக்கு முன் வெளியேறியதை தொடர்ந்து, தற்போது மூன்று போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் அடுத்ததாக, யார் வெற்றி கோப்பையை வாங்குவார் என எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில், அதற்கு முன், பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கு விஜய் டிவி சார்பாக விருதுகள் கொடுக்கப்பட்டது.

முதல் ஆளாக கவினை அழைக்கும் கமல், அவருக்கு 'கேம் சேஞ்சர்' என்கிற விருது கொடுத்து கௌரவிக்கிறார். ஒருவேளை கவின் வெளியேறாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக பைனலிஸ்ட் பட்டியலில் அவர் இருந்திருப்பார். இந்த கேம் வேறு மாதிரி இருந்திருக்கும் என தெரிவித்து, இந்த விருதை அவரது தருவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிந்தித்து செயல்பட்டு இருக்கிறீர்கள் என்பது தெரிந்ததாகவும் இது ஆச்சரியமாக இருந்தது.  இந்த சிறிய வயதில் இப்படி பட்ட முடிவு எடுப்பது கடினம் என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார் கமல். இதற்கு கவின், எமோஷ்னலுக்கு முடிவு கட்டி விட்டு சில நாட்கள் நான் நானாக இருந்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூற, கவினின் பதிலை கேட்டு அரங்கமே கை தட்டல் சத்தத்தில் அதிர்ந்தது.