க்ளைமேக்ஸ் நெருங்கும்போது கண்ணீரும் கதறலும் அதிகமாக இருக்கவேண்டும் என்கிற சினிமா ஃபார்முலாவின் படி பிக்பாஸ் இல்லத்தை விட்டு இன்று கவின் பெட்டி படுக்கையுடன் வெளியேற ‘போகாதே போகாதே என் காதலா’என்று லாஸ்லியா கதறி அழும் புரோமோ விடியோ ஒன்றை சற்றுமுன்னர் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறத்தாழ க்ளைமேக்ஸை எட்டிவிட்டது. இன்று நிகழ்ச்சி 95வது நாளை எட்டியுள்ள நிலையில், கவின் இல்லத்தை விட்டு பெட்டி,படுக்கையுடன் வெளியேறுகிறார். அத்தனைக் காவியக் காதல்களுக்கும் சவால் விடும் வகையில் மிகவும் தத்ரூபமாக அழும் லாஸ்லியா, ’கவின் நோ கவின். நீ வெளியேறக் கூடாது என்று அடம்பிடித்து அழுகிறார். அதற்கு கவின் ’வேற எதையும் மனசுல வச்சிக்காம நான் சொன்னதை மனசுல வச்சிக்கிட்டு வெளையாடணும்’என்று சொல்ல அதற்கு லாஸ்லியா ’எனக்குத் தெரியும் நான் அவங்களுக்காகத்தான் வெளையாண்டுக்கிட்டு இருக்கேன். இல்லைன்னா எப்பவோ வெளியே போயிருப்பேன்’என்றபடி அழுகிறார். அடுத்து அவரிடம் ஒரு போட்டோவை தனது ஞாபகார்த்தமாக அளிக்கும் கவின் வீட்டி விட்டு வெளியேறுவது போன்ற தோற்றத்தை அந்த புரோமோ அளிக்கிறது.

கவினின் இந்த திடீர் வெளியேற்றத்தால் அவரது ஆர்மியும் லாஸ்லியா ஆர்மியும் கதற ஆரம்பித்திருக்கிறார்கள்....இதையும் நடிப்புனு சொல்லிட்டு அலையாதீங்கடா நாதாரிகளா இந்த நல்ல மனசுதான்  #Kavin அவன் அவனை நிரூபிக்க வேண்டிய நேரம் இது ..உன்னைய சப்போர்ட் பண்ணதுக்கு நா ரொம்பவே பெருமை படுறேன் #Kavin நீ நல்லா இருப்ப. அடேய் எச்ச hater's என்னோட ட்வீட் வந்து கதறாதீங்க 🙏...தப்பு பண்ணாத ஒருத்தன நான் தப்பு பண்ணிட்டேன் nu avana namba vachu அவனோட சுய புத்தியில் யோசிக்க விடாம பண்ணிடீங்களே da. உங்களுக்கும், உங்க கமல் ஐய்யாக்கும் இனி யார winner ஆக்கனும்னு தோணுதோ ஆக்கிகோங்க. ஆனா கடசில எங்கள, மக்களை, முட்டாள்தனம் ஆக்கிடீங்களே....சூழ்ச்சிக்கு இரையாகி நிராயுதபாணியாக எவர் துணையும் இன்றி அம்பு படுக்கையை சுவிகரித்துக்கொண்ட பீஷ்மர் கவின் ,உன் வாழ்வில் எல்லா நலனும் பெற வாழ்த்தி கனத்த மனதோடு bb யில் இருந்து செல்லும் உன்னை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்...என்று கமெண்டுகள் கியூ கட்டுகின்றன.