பிக்பாஸ் மூன்றாவது சீஸனின், கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்களில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மீது, ரசிகர்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அவர் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில், நடந்து கொள்ளாமல்... தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார்.

ஆனால் அபிராமி, மீரா மிதுன், ஷெரின், சாக்ஷி, போன்றவர்கள் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என ஓவர் ரியாக்ட் செய்கிறார்கள். குறிப்பாக அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இரண்டாவது நாளே கவின் மீது காதல் உள்ளதாக கூறி புதிய குண்டை தூக்கி போட்டார்.

இவர் மட்டும் இன்றி, ஷெரின், சாக்ஷி, போன்ற பிரபலங்களும் கவினை சுற்றி சுற்றி வருகிறார்கள். கவினும் மச்சான் மச்சான் என்று பெண் போட்டியாளர்கள் மீது அன்பு மழையை  பொழிந்து வருகிறார்.

ஆனால் இவருடைய வலையில் சிக்காத போட்டியாளராக உள்ளார் லாஸ்லியா... கைவினை 'அண்ணா' என்று அழைத்து அதிர்ச்சி கொடுத்தார்.  இதனை சற்றும் எதிர்பார்க்காத கவின், அவருடைய வாட்டர் பாட்டிலை எடுத்து வைத்து கொண்டு இனிமேல் தன்னை அண்ணா என்று சொல்லக்கூடாது என்று தண்டிக்கிறார். 

கவினிடம்  இருந்து இரவு முழுவதும் வாட்டர் பாட்டிலை வாங்க முடியாத லாஸ்லியா இனிமேல் உன்னை அண்ணா என்று சொல்ல மாட்டேன் என்று கூறியபின்னர்தான் கவின் வாட்டர் பாட்டிலை கொடுத்தார். கவினின் இந்த செயல் லாஸ்லிய ஆர்மியை சேர்ந்தவர்களை கடுப்பாக்கி உள்ளது. எனவே கவினை அவர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.