பிக்பாஸ் வீட்டில் அனைத்து பெண்களிடமும், ஜாலியாக பேசி,  ப்ளே பாயான கடந்த இரண்டு வாரங்களை கழித்து வந்தவர் நடிகர் கவின். ஆனால் இப்போதோ இவருக்கு லாஸ்லியா, மீது கவனம் சென்றதால் சாக்‌ஷி, அபிராமி  ஆகியோரிடம் இருந்து விலகியே உள்ளார். 

இதுகுறித்து லாஸ்லியாவிடம் அவரே , அபியிடம் மும்பு போல் பேச முடியவில்லை என்று கூறியது மட்டும் இன்றி, சாக்ஷியிடம் இருந்து விலகியதும் அப்பட்டமாக தெரிகிறது.

இந்நிலையில் கவின் குறித்து, அவருடைய நண்பர்களிடம் பிரபல ஊடகம் ஒன்று பேட்டி எடுக்க முயன்றது. அப்போது ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், கவின் மீது உள்ள தவறுகளை சுட்டி காட்டி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

தொகுப்பாளர் கேட்ட கேள்வியால், கடுப்பான கவினின் நண்பர் நடிகர் ராஜு மற்றும் மற்றொருவர் நண்பரும் , ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் கவினை நெகட்டிவ்வாக காட்ட முயற்சி செய்கிறீர்கள். ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அவரை பற்றி எப்படி தெரிந்து கொள்ள முடியும். என கோபமாக பேசி மைக்கை கழட்டி போட்டுவிட்டு அங்கிருந்து செல்லும் காட்சியின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ: