பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது காதல் பிரச்சனைகள் தான் அடிக்கடி, விவாதிக்கப்படுகிறது. நேற்றைய தினம் கூட பல போட்டியாளர்கள், மொட்டை கடுதாசி டாஸ்கில் , அபிராமி - முகேன் உறவு குறித்தும், லாஸ்லியா , கவின், சாக்ஷி பற்றிய கேள்விகளையும் முக்கிய கேள்வியாக வைத்தனர்.

இந்நிலையில் நேற்று புகைந்த பிரச்சனை இன்றும், பிக்பாஸ் வீட்டில் பற்றி எறிவது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கவின் அனைவர் முன்பும் "சாக்ஷி வேற மாதிரி ஆகிட என்னை காலி பண்ணுற என்பது எனக்கு நன்றாக தெரிகிறது இனிமேல் அந்த பக்கம் நான் போக மாட்டேன் என கூறுகிறார் . இதை தொடர்ந்து சித்தப்பு சரவணன் நான் சொல்வதை கேட்பியா என கவினிடம் கேட்க, கவின் அவள் என்னை ஏமாற்றுகிறான் என அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

மற்றொரு புறம் சாக்ஷி அழும் காட்சியும் காட்டப்படுதுகிறது. இதற்கு ஏதோ மதுமிதாவுக்கு சமரசம் பேச முயல்கிறார். பின் திடீர் என லாஸ்லியா, சாக்ஷிக்கு நடந்த அநியாயத்துக்கு காரணம் நான், தயவு செய்து யாரும் என்னிடம் வந்து கதைக்காதீங்க ப்ளீஸ் என அழுகிறார். எனவே நேற்றைய தினம் போல் இன்றைய தினமும் கவின் - சாக்ஷியின் அழுகைக்கு பஞ்சம் இருக்காது என்ரே எதிர்பார்க்கலாம்.