சமீபத்தில் நிறைவு பெற்ற பிக்பாஸ் 3 நிகழ்ச்சி, இளைஞர்களின் கொண்டாட்டம் என்று சொல்லும் அளவிற்கு இளசுகளைக் கொண்டு களம் இறங்கியது. கவின், சாண்டி, முகென், தர்ஷன் என பாய்ஸ் குரூப்பும், லாஸ்லியா, அபிராமி, மீரா மிதுன், சாக்‌ஷி, ஷெரின் என பியூட்டிஸ் குரூப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் கவின், தர்ஷனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. எப்படியும் கவின் தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீர் திருப்பமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் கவின். 

இறுதியாக பிக்பாஸ் வின்னராக மலேசிய பாடகர் முகேன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து சூப்பர் சிங்கர் உள்ளிட்டபல நிகழ்ச்சிகளை முகேனை வைத்து  விஜய் டி.வி. நடத்தி வருகிறது. தற்போது "முகேனின் வெற்றிப்பயணம்" என்ற தலைப்பில் விஜய் டி.வி. புதிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள அந்த நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் விஜய் டி.வி. வெளியிட்ட புரோமோவை நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துவருகின்றனர்.  

என்னதான் பிக்பாஸ் வெற்றியாளர் முகேன் என்றாலும், ரசிகர்கள் எண்ணிக்கையில் கவினை அசைக்க முடியாது.விஜய் டி.வி.யின் இந்த புரோமோ வீடியோவைப் பார்த்த கவின் ரசிகர்கள் கடுப்பில் காரசாரமாக முகேனை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் முகேன் அப்படி என்ன சாதனை பண்ணிட்டாருன்னு, அவரை வச்சி நிகழ்ச்சி பண்றீங்கன்னு விஜய் டி.வி.யையும் கலாய்த்து வருகின்றனர்.

எப்பவுமே டி.ஆர்.பி. கிங் கவின் தான், எங்க அண்ணா கவின் தான் ரியல் பிக்பாஸ் வின்னர் என சகட்டுமேனிக்கு கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் தல, தளபதி ரசிகர்கள் கட்டி உருளுவதை விட கவின், முகேன் ரசிகர்கள் போடும் சண்டை அனைவரையும் தெறிக்கவைத்துள்ளது.