பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து, தனக்கு 4 பெண்கள் கேர்ள் பிரென்ட் என கூறி கொண்டு, மிகவும் குஷியாக காதல் மன்னன் போல் வலம் வந்தவர் பிரபல நடிகர் கவின்.

இவர் உள்ளே வந்த இரண்டாவது நாளே 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அபிராமி, கவினை காதலிப்பதாக கூறினார். ஆனால் இவருடைய காதலை கவின் ஏற்று கொள்ளாததால், தற்போது முகேன் மீது இவருடைய கவனம் திரும்பியுள்ளது. இதை அவரே கூட பல முறை கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கவினை காதலிப்பதாக சாக்ஷி இவரை சுற்ற, கவின் லாஸ்லியாவை சுற்றி சுற்றி வந்தார். தற்போது லாஸ்லியா தனக்கு கவினை பிடிக்கும் ஆனால் அது காதல் இல்லை என கூறிவிட்டதாலும், கவின் பார்வை மீண்டும் சாக்ஷி மீது திரும்பியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ஜெயிலில் இருக்கும் சாக்ஷியிடம் இரவு நேரத்தில் அமர்ந்து பேசுகிறார் கவின். அப்போது மீண்டும் நமக்குள் எதுவும் இல்லை என கூறுகிறார். பின் கவின் சாக்ஷியிடம் மன்னிப்பு கேட்டு அழும் காட்சி இடம்பெற்றுள்ளது.