விஜய் டி.வியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-3 நிகழ்ச்சி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற நடன இயக்குநர் சாண்டி - நடிகர் கவின் காம்போவின் அட்ராசிட்டிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. 
சக ஹவுஸ் மேட்ஸை கிண்டல் செய்வது, கானா பாடல் பாடுவது, சுற்றியுள்ள அனைவரையும் கலகலப்பாக வைத்துக் கொள்வது என செம எண்டர்டெய்ன்மென்ட் இந்தக் காம்போ, ரசிகர்களால் Kandy என செல்லமாக அழைக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு முன்பே, கவினும் சாண்டியும் நல்ல நண்பர்கள் என்பதால், அவர்களது நட்பும், அதை தாண்டிய அண்ணன் தம்பி உறவும் ரசிகர்களின் மனங்களில் நினைவுகளாய் ஆழமாக பதிந்தது.


 
தற்போது, நிகழ்ச்சி நிறைவடைந்து வெளியில் இருவரும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சாண்டி கவினுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  
                                     
அதில், "கடந்த ஜனவரி 2016  ஆம்  ஆண்டு என்னுடைய முதல் டான்ஸ் ஸ்டுடியோவின் திறப்பு விழாவில் கவின் தம்பியுடன்! சில உறவுகள் எப்பொழுதும் மாறாது" என்பது போல் குறிப்பிட்டிருந்தார்.
 
அந்த பதிவிற்கு பதிலளித்த கவின், "நமக்கு எதுக்கு ஜி இந்த விளம்பரம்லா அப்டியே போவோம்" என்று குறிப்பிட்டுள்ளார். கவின் - சாண்டி இருக்கும் இந்தப் புகைப்படம்தான், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படத்திற்கு லைக்குகைளை அள்ளித்தெளித்துவரும் Kandy Army-யினர், இருவரின் நட்பையும் பாராட்டி கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.