பிக்பாஸ் நிகழ்ச்சி, சண்டை சச்சரவோடு போகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடந்த வாரம் ஏமாற்றமே கிடைத்தது என கூறலாம். காரணம், கடந்த வாரம் முழுக்க கவினின் முக்கோண காதல் கதை குறித்து எழுந்த பிரச்சனையால், காதல் சோகத்தில் மூழ்கியது பிக்பாஸ் வீடு.

இந்நிலையில் இந்த வாரம் ஒரு வேலை மோகன் வைத்தியா வெளியேறுவார், என யோசித்து அவருக்கான பாடல் ஒன்றையும் எழுதி அதற்கு மெட்டு போட்டு வைத்திருந்தனர் கவின் மற்றும் சாண்டி.

இதுகுறித்து சேரன் எப்படி இந்த வாரம் மோகன் வைத்தியா செல்வார் என உங்களுக்கு தெரியும் என கேட்டார். அதற்கு சாண்டி மற்றும் கவின் இருவரும், சரவணனுக்கு ஏற்கனவே பாடல் ரெடியா இருக்கு என பதில் கூறுகிறார்கள்.

பின் தனக்கு ஏதாவது பாடல் உள்ளதா என சேரன் கேட்டு விட்டு சென்ற பிறகு. அவருக்கு பாடல் எழுதி விட வேண்டும். நியாபகம் வருதே என்று அவரின் பாடல் ராகத்திலேயே பாடல் உருவாகும் வேளையில் தீவிரமாக இப்போது கவின் மற்றும் சாண்டி இருவரும் இறங்கியுள்ளனர்.