தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த பலர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நாளை காலை 9 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், மற்றும் பெப்சி அமைப்பினர் என அனைவரும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரியும் போராட்டம் நடத்த உள்ளனர். 

இந்நிலையில் இன்று நாகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அந்த புகைப்படங்கள் இதோ...