ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் புது படங்கள் வெளியாவது வழக்கம். அதே போல் இந்த வாரமும் 'காற்று வெளியிடை', '8 தோட்டாக்கள்', 'செஞ்சிட்டாளே' ஆகிய படங்கள் வெளியாகியது.

இதில் மிகவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப் பட்ட படமாக காற்று வெளியிடை இருந்தது காரணம், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் ஒருவர் என கூறப்படும் மணிரத்னம் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

ஆனால் இந்த படம் ரசிகர்கள் மனதை அதிகம் கவர வில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது. ஒரு படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் புரிய வேண்டும் ஆனால் இந்த திரைப்படம் அப்படி இல்லை என ரசிகர்கள் கூறியுள்ளனர். அதே போல முதல் பாதி காமெடியாக நகர்ந்தாலும் இரண்டாம் பகுதி ரசிகர்கள் மனதில் சிறிதும் ஒட்டவில்லை.

கார்த்தி புதுமையான தோற்றத்தில் பிரதிபலிப்பதாலோ என்னவோ ரசிக்க தோன்றுகிறது ஆனால் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. படத்தின் கதாநாயகியை அதிதி தன்னுடைய கதாபாத்திரைத்தை கச்சிதமாக நடித்துள்ளார் என்று சொல்லலாம். இப்படி ஒரு சில பிளஸ் அண்ட் பல மைனஸ்கள் இருக்கிறது. 

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்கினார் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு படமான '8 தோட்டாக்கள்' காற்றை மிஞ்சி தோட்டா பறக்கிறது என்று தான் கூறவேண்டும்.

தரமான கதையை எடுத்து ரசிகர்களுக்கு புரிவது போல் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக படத்தை எடுத்து சென்றிருக்கிறார். அதே போல படத்திற்கு ஏற்ற போல் கதாநாயகன், கதாநாயகி கச்சிதமாக பொருந்தி இருக்கின்றனர்.