நடிகை ஜோதிகா நடித்துள்ள 'காற்றின் மொழி' திரைப்படம் இன்று வெளியாகிறது.இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடித்திருக்கும் படம் 'காற்றின் மொழி'. இந்தியில் வித்தியாபாலன் நடித்து வெளிவந்த 'தும்ஹரி சுலு' என்ற படத்தின் தமிழ் ரிமேக்காகும்.  இப்படத்தில், நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். 

வித்யா பாலனுக்கு நிகராக ஜோதிகா தன்னுடைய நடிப்பில் கலக்கி இருக்கிறார் என இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டு நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.