நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' குறித்து அவ்வபோது சில தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' குறித்து அவ்வபோது சில தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன், சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

'காத்து வாக்குல ரெண்டு காதல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் துவங்கி தொடர்ந்து நடைபெற்றது. இதுவரை சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட முடிவடைந்த நிலையில், திடீரென லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனினும் தற்போது படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நிலையில் அண்மையில் தான் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், முடிந்த வரை கூடிய விரைவில் மீத உள்ள படப்பிடிப்பையும் நடத்தி முடித்து, அக்டோபர் மாதத்திலேயே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.