நடிகர் விஜயுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்த அனுபவம் பற்றி முதல்முறையாக நடிகை கத்ரீனா கைஃப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக '63 வது' படத்தில் கைகோர்த்து நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், யோகி பாபு,  கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள இடங்களில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கொக்கோ கோலா விளம்பரத்தில் விஜயுடன் இணைந்து நடித்த பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்,  இந்த விளம்பரத்தில் நடித்த போது,  விஜய்யை பார்த்து வியந்த விஷயம் ஒன்றையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகியில்...  ஊட்டியில் இந்த குளிபானத்தின் விளம்பரப் பட ஷூட்டிங் நடந்தபோது,  என் எதிரே ஒருவர் வெகு நேரமாக காத்திருந்தார்.  அப்போது நான் போன் பேசிக் கொண்டிருந்ததால் அவரை கவனிக்க முடியவில்லை.  பின் நிமிர்ந்து பார்த்தபோது அவர் நடிகர் விஜய் என தெரியவந்தது. அவர் தனக்கு பாய் சொல்லிவிட்டு கிளம்புவதாக வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தார். 

என்னை தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காக... அவர் செய்த செயலும் பொறுமையும் வியக்கச் செய்தது என கூறியுள்ளார்.