விஷால் ,தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது என்பதை அறிவோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த விழாவில் பேசிய வைகைப்புயல் வடிவேலு, தான் இந்த படத்தில் மனநல மருத்துவராக நடித்துள்ளதாகவும், டுபாக்கூர் டாக்டர் போன்று இல்லாமல் உண்மையான டாக்டர் வேடம் என்றும் கூறினார்.

மேலும் தான் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தேன் என்று சொல்வது தவறு என்றும் தனக்கு என்றைக்குமே கேப்பு இருந்ததில்லை என்றும் தான் என்றுமே டாப்புதான் என்றும் கூறினார். 

மேலும் தன்னுடைய ஜோக்குகள் மற்றும் படங்களை பயன்படுத்தியே பலர் அரசியல் முதல் பல்வேறு மிமீஸ் செய்து வருகின்றனர் என்றும் இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய உழைப்பு தான் என்றும் வடிவேலு கூறினார்.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் குறித்து வடிவேல் கூறும்போது, 'நந்தகோபால், குபீர்ன்னு பிறந்த குபேர பிள்ளை என்றும் அவருக்கு பொய்யான முகம் கிடையாது. உண்மையை மட்டுமே பேசுபவர். 

அவருடைய நல்ல மனதிற்காகவே இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கூறினார்.