பாலிவுட் திரையுலகில், முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரீனா கைப்.  பாலிவுட் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார். தற்போது அக்ஷய் குமார், மற்றும் சல்மான் கான் படங்களில் நடித்து வருகிறார்.

இவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயற்சி செய்த போதும், அது முடியாமல் போனது. ஆனால் பிரபல குளிர்பான விளம்பரத்தில், தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடைய நெருங்கிய தோழியுடன் கலந்து கொண்டார். அப்போது, அவருடைய தோழி கேத்ரீனா கைப், பற்றி கூறுகையில்..  “கத்ரினா வீட்டில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்… உன்னுடைய பேண்ட் நன்றாக இருக்கிறது என்று கத்ரினா கூறினார். 


நான் அதைக் கழற்றிக்கொடுத்தேன். நான் வெறும் உள்ளாடையுடன் உட்கார்ந்திருந்தேன். அவர் அதை எடுத்து அணிந்துகொண்டு வெளியே கிளம்பி போனார்…” என்று கூறுகிறார்.

பின்னர் கத்ரினா கைஃப் பேசுகையில், “நான் எங்கு வேண்டுமானாலும் ஷாப்பிங் செய்பவள்… உங்களைப் பார்க்கிறபோதே நான் ஷாப்பிங் செய்துவிடுகிறேன். நான் மற்றவர்களிடம் வாங்குவதே, வைத்துக்கொள்ளத்தான்” என்று கூறினார்.