இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து தன் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். ஓய்வில்லாமல் பல படங்களில் நடிப்பது மற்றும் இன்றி, இசையமைத்தும் வருகிறார். மேலும் அவ்வப்போது சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், பிக்பாஸ் ரைசாவுடன் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் படி தற்போது படத்தின் வித்தியாசமான டைட்டில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'காதலிக்க யாருமில்லை' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐடி துறையில் பணிபுரியும் ஊழியராக நடித்து வருகிறார். 

Scroll to load tweet…

இந்த படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆரா சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.