kathal sollavanthen actor yuthan balaji divorce wife

யூதன் பாலாஜி:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த '2006' ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான 'கனா காணும் காலங்கள்' சீரியலில் ஜோசப் என்கிற கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் நடிகர் யூதன் பாலாஜி. 

இதைத்தொடர்ந்து, தமிழில் இவர் 'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்', 'மெய்யழகி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'நகர்வலம். என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

திருமணம்:

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

விவாகரத்து;

திருமணமாகி இரண்டு வருடம் மட்டுமே ஆன நிலையில் இவர் தன்னுடைய மனைவியிடம் இருந்து காதலர் தினமான நேற்று விவாகரத்துப் பெற்றதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

இந்த தகவலை யுதன் பாலாஜி தன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அனைத்து காதலர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.