kathal mannan actress maanu help special childs
அஜித் நடித்த 'காதல் மன்னன்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மானு. இந்தப் படத்தைத் தொடர்ந்து 16 வருடத்திற்குப் பின் என்ன சத்தம் இந்த நேரம் என்னும் படத்தில் நடித்தார்.
.jpg)
இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றிப் படமாக அமைந்ததால், இவருக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் இவர் ஒரு டான்சர் என்பதால் நடனத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார்.
.jpg)
மேலும் ஊனமுற்றோருக்காகவும், ஆதரவற்றோருக்காகவும் மானு என்கிற பெயரில் பல வருடமாக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது திருமணமாகி தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வரும் மானு தொடர்ந்து தன்னுடைய அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.
.jpg)
இந்நிலையில் இன்னும் இரு நாட்களில் தீபாவளி வருவதை ஒட்டி, பார்வையற்ற மற்றும் ஊனமுற்றவர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கினார் மானு. இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி, மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
