kathal arunkumar news
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சொந்த ஊரை விட்டு வந்து, சினிமாவில் நடிக்க முடியவில்லை என்கிற கனவு பலிக்காமல் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் பலர். இந்தக் கதை அந்தக் காலம் முதல் தற்போது வரை அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது.
ஆனால் தன்னுடைய சினிமா கனவை நிறைவேற்றி, இன்று வெள்ளித்திரையில் மின்னிக்கொண்டிருப்பவர்கள் தான் சூரி, சமுத்திரகனி, காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள்.
காதல் படத்தின் மூலம் துரு துரு சிறுவனாக அறிமுகம் ஆனவர் தான் அருண். சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் போலவே உள்ளார் என்று கூட கருத்துகள் உலவின. இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த சிவகாசி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதைத் தொடந்து இவருக்கு திரைப் படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பசி பட்டினியோடு இருந்து படங்களில் நடிக்க இவர் போராடியும் வாய்ப்பு கிடைக்காததால், தன்னுடைய சொந்த ஊருக்கே சென்றுவிட்டாராம்.
தற்போது, அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடியில் சிறு தொழில் ஒன்றை செய்து வருகின்றாராம். இப்படி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் திரும்பியவர்கள் பலர் என்ற போதிலும், திறமையை நிரூபித்தும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது வருத்தம்தான்.
