Kasturi :"தப்பான ஆட்களை தாறுமாறா promote பண்ணுவாங்க. கண்டபடி பேசுறதுக்கு 'content' னு பேரு" ரியாலட்டி ஷோக்கள் பற்றி கஸ்தூரியின் கருத்து குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

வழக்கறிஞரான நடிகை கஸ்தூரி அரசியலில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அதோடு அவ்வப்போது விமரிசனங்களால் சமூகவலைத்தளத்தை அக்கிரமித்தும் வருவார். இவர் வசிப்படாத அல் இல்லை என்னும் அளவிற்கு அரசியல் சினிமா, தொலைக்காட்சி ஷோஸ் என அனைத்து ஏரியாக்களில் மூக்கை நுளைத்து வருகிறார் கஸ்தூரி.

இந்நிலையி இவர் தற்போது ரியாலிட்டி ஷோ குறித்து ட்வீட் செய்திருந்த பதிவுதான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்ட கஸ்தூரி ஹவுஸ் மேட்டை பாடாய் படுத்தி ஒருவழியாக எலிமினேட் ஆனார். இவர் அங்கு இருந்தவரை பல பிரச்னைகளுக்கு வித்திட்டவராக இருந்தவர்.

இவ்வாறு இருக்க நேற்று தனது ட்வீட்டர் பக்கத்தில்: அந்த டிவி culture அப்படித்தான். Reality show la reality சுத்தமா இருக்காது. தப்பான ஆட்களை தாறுமாறா promote பண்ணுவாங்க. கண்டபடி பேசுறதுக்கு content னு பேரு. ஆனா இப்பல்லாம் சாயம் சீக்கிரமே வெளுத்துருது. #vaaymaiyeVellum என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஏற்கனவே வசந்த் தொலைக்காட்சியில் வாய்மையே வெல்லும் என்னும் ஷோ ஒளிபரப்பாகி வருவதால் அந்த தொலைக்காட்சி குறித்து கஸ்தூரி விமரிசனம் செய்திருக்க கூடும் என்னும் எதிர்ப்பு கிளம்பியது. 

பின்னர் தனக்கு வசந்த் டிவியில் வாய்மையே வெல்லும் என்னும் ஷோ ஒளிபரப்பாவது தெரியாது என்றும், அந்த நிகழ்ச்சியை நான் குறிப்பிடவில்லை என்றும் கஸ்தூரி கூறியிருந்தார்.

இதற்கிடையே நீங்கள் பிக் பாஸ் என்னும் ரியாலட்டி ஷோவில் கலந்து கொள்ளும் போது இது போன்ற நிகழ்ச்சிகளில் கோளாறு இருப்பது தெரியவில்லையா என பலர் கேட்டு வந்தனர். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் ஷோவில் அரசியல் களம் போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மிக நல்ல கருத்துக்களை பேசி வரும் போட்டியாளர்களுக்கு தற்போது செம வாய்ப்பு கிடைத்தார் போல ஒருவரி ஒருவர் தரம் தாழ்ந்த வார்த்தைகளை கொண்டு விமர்சித்து வருகின்றனர்.

ஒருவேளை இதுகுறித்து கஸ்தூரி பேசியிருக்க கூடும் என்னும் யூகம் ஏற்படும் விதத்தில் இவர் தற்போது வெளியிட்டுள்ள ட்வீட்டில்: என் அனுபவத்தில் , முதலாளிகளையும் கோமாளிகளையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிந்து கொண்டேன், அத்ததான் சொன்னேன். என கூறியுள்ளார்.

Scroll to load tweet…

இவரது ட்வீட்டும் அதன் கமெண்டுகளுமே இன்றைய ட்ரெண்டாகி உள்ளது.