kasthuri twit issue have a chance to arrest

நடிகை கஸ்தூரி சமீப காலமாக தன்னுடைய மனதில் படும் சமூக கருத்துக்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் ஒரு சில கருத்துக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தாலும் சில கருத்துக்கள் இவருக்கு பிரச்சனையாகவே மாறிவிடுகிறது. 

சிறுமியின் பாலியல் பலாத்காரம்:

கடந்த மாதம் 22-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் தமிழக மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

கஸ்தூரியின் ட்விட்:

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஸ்தூரி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். இதனால் ட்விட்டரில் ஒரு கலவரமே வெடித்தது.

இவர் சமூகத்தை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்ததால்... இரு சமூகத்தினரிடையே சண்டையை தூண்டிவிடும் விதத்தில் கஸ்தூரி கூறியுள்ளதாகவும். இந்த செயலுக்கு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் கஸ்தூரி கைதாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.