kasthuri tweet about beef protest in iit

முத்த போராட்டத்திற்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம், மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை பதிவை வெளியிட்டுள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மத்திய அரசின் உத்தரவை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவர்களும் அங்கங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ் ராஜகோபாலன் முன்தினம் சென்னை வளாகத்திலேயே கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகாரை சேர்ந்த மணீஷ் என்ற மாணவனே தாக்கியதாகவும், மணீஷ் வலதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் தவறானது, அது மற்றவர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் இருந்ததால் தான் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு ட்விட்டில்...

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்ததை நான் எதிர்க்கிறேன், ஆனால் என்னுடைய உணவு முறை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருக்க கூடாது. மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை.

Scroll to load tweet…

மேலும் ஒரு ட்விட்டில்...

''முத்த போராட்டத்திற்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம், ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்திருக்கலாம்'' என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகை கஸ்தூரியின் இந்த சர்ச்சை ட்விட்டால் பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு மும்பு ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.