பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை மீரா வெளியேற முக்கிய காரணம், சேரன் மேல் அவர் சுமாற்றிய பழி. சேரன் மீராவை 'கிராமத்து டாஸ்கில்' தள்ளி விட்டு இருந்தாலும், மீரா சொன்ன விதத்துக்கும், சேரன் நடந்து கொண்டதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. 

இதனை, குறும்படம் போட்டு விளக்கி கூறினார் கமல். சேரனும் இதனை மிகவும் எமோஷனலாக எடுத்து கொண்டு, தன்னுடைய மகள்களின் வாழ்க்கை, திருமணம், எதிர்காலம் என நினைத்து கண்கலங்கியது, மீரா மீது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், கடந்த வாரம் ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து யாரும் எதிர்பாராத வண்ணமாக, நடிகர் சரவணன் 'பஸ் பயணத்தின் போது கல்லூரி நாட்களில் நடந்த சம்பவத்தை கூறியது, சர்ச்சையாக மாறியதால் திடீர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்துள்ளார் நடிகை கஸ்தூரி. இது குறித்த காட்சி முதல் ப்ரோமோவில் காட்டப்பட்ட நிலையில், இரண்டாவது ப்ரோமோவில், இவர் சேரன், ஷெரின் மற்றும் தர்ஷனுடன் பேசும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ப்ரோமோவில் சேரன், ஏற்கனவே மீரா, வனிதா ஆகிய பெண்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். ஒன்றுமே தெரியாதது போல் கேட்கும் கஸ்தூரி,  மீரா விவகாரத்திற்கு பின்னர் கையை ரோபோ மாதிரி நேராக வைத்துள்ளீர்களே என்று சேட்டை செய்தார். அதனைக் கேட்டு சேரன் சிரித்தவாறு இருக்கிறார் . பின் தர்ஷன் மற்றும் ஷெரினிடமும் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீர்கள் என்றும் அதற்கு அவர்கள் பதில் கொடுத்ததும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.