kasthuri taking about wrong relationship
நடிகை கஸ்தூரி, தற்போது அதிகமாக திரைப்படடங்களில் நடிக்காவிட்டாலும், எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர். அதே போல் எப்போதுமே தன்னுடைய மனதில் பட்ட கருத்து சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் தயக்கப்படாமல் தேங்காய் உடைப்பது போல் உடைத்து கூறிவிடுவார்.
அரசியல் பொறுத்தவரை இவர் யார் பக்கமும் சாயாமல், அனைத்து கட்சி நண்பர்களுடனும் நல்ல நட்பு ரீதியில் தான் பழகி வருகிறார். மேலும் இவரை தன்னுடைய அரசியல் கட்சியில் இணைந்து சேவை செய்யுமாறு இவருக்கு பல முறை அழைப்புகள் வந்தும் தற்போது வரை எந்த அரசியல் சாயமும் இல்லாமல் தான் இருந்து வருகிறார்.

பொதுவாகவே இவர் மனதில் பட்ட கருத்தை தெரிவித்துக்கொண்டு தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்தாலும் இவரை சீண்டி விட்டு சண்டைவாங்குபவர்களும் இருந்துக்கொண்டு தான் இருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று விடுதலைபுலிகளுக்கு துரோகம் செய்தா கருணா விற்கும் கஸ்தூரிக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக எழுதி இருந்தது. தற்போது அதற்கு விளக்கம் கொடுக்கும் விதத்தில் பேட்டியளித்துள்ள நடிகை கஸ்தூரி, இந்த பத்திரிக்கை இப்படி எழுதியதற்கு ஒரு சின்ன ஆதாரமாவது உண்டா என்றும்.. எதை வைத்து இப்படி அசிங்கமாக எழுத முடிந்தது என எனக்கு தெரியவில்லை என மிகவும் கோபமாக கூறியுள்ளார்.

மேலும் நீயெல்லாம் அசரியல் பேச வந்துட்டியா என்று, தன்னை தவறாக பேசி வருவதாகவும் மன வேதனையோடு கூறியுள்ளார் கஸ்தூரி.
