kasthuri join trump patry
நடிகை கஸ்தூரி திமுக.,வில் இணைந்துள்ளதாக நேற்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகப் பரவியது. மேலும் இவர் எதிர்க் கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற இவருக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததாகவும் கொளுத்திப் போட்டனர்.
தற்போது இதுகுறித்து நடிகை கஸ்தூரி அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் என்னை பல கட்சிகளுடன் இணைத்துப் பேசுவது ஒன்றும் புதிதில்லை... பழக்கம் ஆன ஒன்றுதான். எனக்கு அனைத்து காட்சியிலும் நண்பர்கள் இருக்கின்றனர் அனைவருடனும் நான் ஒரே மாதிரித்தான் பழகி வருகிறேன்.
மேலும் நான் அடிக்கடி, அமெரிக்காவிற்கு என் சொந்த விஷயத்திற்காக சென்று வருவதால், ட்ரம்ப் கட்சியில் கொ.ப.செ. வாக கஸ்தூரி நியமனம் என்று சொல்லாமல் விட்டீர்களே என ஆச்சர்யத்தோடு கூறியுள்ளார்.

