மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்தவாரம் கஸ்தூரி வெளியேற உள்ளார்.

16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு கூடுதலாக பலம் சேர்க்கும் விதமாக சமூக வலைதளங்களில் அதிரடி சரவெடி கருத்துக்கள் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்த நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்.

உள்ளே சென்று ஒரு வாரம் ஒரு வார காலத்திலேயே சக போட்டியாளர்களுடன் அதிக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றே கூறலாம். மதுமிதா மற்றும் சாண்டி மாஸ்டருக்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சினையின் போது சமாதானம் செய்வதற்காக உள்ளே நுழைந்த கஸ்தூரியை பார்த்து கவின்,  இது உரிமை மீறல்...  உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று... இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டார்.

இதே போன்று சமைக்கும்போது சில டிப்ஸ் சொல்லி கொடுத்தார் கஸ்தூரி. அப்போது சாப்பிடுவதற்கு முன் பிரஷ் செய்துவிட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என கூறுவார். அப்போதும் கவின் இது தேவையில்லாத கமெண்ட்... டிப்ஸ் என்றால் சமையல் டிப்ஸ் மட்டும் பேசினால் போதுமென சற்று கோபமாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தன்னை காயப்படுத்திக் கொள்வதாகமதுமிதாவை பிக்பாஸ் டீம் வெளியேற்றியது. அவர் வெளியேறுவதற்கு முன் பிக்பாஸ் நிகழ்வில் கடைசிவரை நிலையாக இருந்து வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றிருப்பவர்கள், அதற்கான தகுதியை பெற்றிருப்பவர்கள் இரண்டுபேர் மட்டுமே..சேரன் மற்றும் கஸ்தூரி என தெரிவித்து இருந்தார்.

ஆனால் உள்ளே சென்ற ஒரு வாரத்திற்குள் கஸ்தூரி இந்த வாரம் வெளியேறுகிறார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னதாகவே தனது ட்விட்டர் பதிவில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் அனைவர் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்ட கஸ்தூரிக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விஷயம் ஏற்கனவே தெரிந்து இருக்கும் இருந்தாலுமே கூட அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமல், எப்போதும் இருப்பது போலவே அதிரடி சரவெடியாக பேசுவதும் துருதுருவென இருப்பதுவுமாகவே இருந்தார். மேலும் இந்த வாரம் தர்ஷன் சேரன் கஸ்தூரி சாண்டி நாமினேட் செய்யப்பட்டு இருந்தது. இதில் கஸ்தூரி இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.