பிக்பாஸ் போட்டியாளர்களில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் ஒருவரான நடன இயக்குனர் சாண்டியின் இன்னொரு முகம் பற்றி தெரிந்தால், மக்கள் அவரை வில்லனாகத்தான் பார்ப்பார்கள் என, கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.

பிரபல நடிகை கஸ்தூரியின், பார்வை சமீப காலமாக, பிக்பாஸ் நிகழ்ச்சி மீது திரும்பியுள்ளது. இதற்கு காரணம் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்கிறார் என்ற, தகவல் கிசுகிசுக்கப்பட்டாக கூட இருக்கலாம்.

இந்நிலையில் இவர் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் இது வரை, முதல் வாரத்திலிருந்து எந்த வாரத்திலும் நாமினேஷனில் சிக்கவில்லை. இந்த வாரம் இவர் நாமினேஷன் செய்யப்படுவார் என்பது கூட சந்தேகம் தான்.

நடிகை கஸ்தூரி அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக சாண்டி இருப்பதால் அவருடைய பாசிட்டிவ் பக்கத்தை மட்டுமே அந்த சேனல் ஒளிபரப்பு செய்து வருகிறது. அவருக்கு நகைச்சுவை, ஜோக்குகள், டான்ஸ் தவிர இன்னொரு பக்கம் இருக்கின்றது. அந்த பக்கம் வெளிப்படும்போது அவர் வில்லனாக பார்க்கப்படுவார் என்று கஸ்தூரி கூறியுள்ளார்.