kasthuri about political

சினிமாத்துறையை சேர்ந்த பலர், தங்களுடைய அரசியல் குறித்த கருத்துக்களை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலும் ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் தங்களுக்கு சினிமாத்துறையை சேர்த்தவர்கள் வேண்டாம் என தங்களுடைய கருத்துக்களை நேரடியாகவும் தெரிவித்து வருகின்றனர் 

இது குறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில்... 'திருடர்கள், கொள்ளைக்காரர்கள், தன்னுடைய குடும்பம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற சுயநலவாதிகள் எல்லாம் அரசியலில் இருக்கும்போது சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கின்றது. 

இன்றைக்கு கமல்ஹாசன், ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், கவுதமி உள்பட பல சினிமாக்காரர்கள் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற விஷயங்களில் பாசிட்டிவ் குரல் கொடுத்தனர். 

இன்றைய சினிமா இளைஞர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. மாற்றம் முன்னேற்றம் என்பது இவர்களுக்கு மட்டும்தான் சொந்தமா, சினிமாக்காரர்களும் நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வரக்கூடாதா? என்று ஆவேச கேள்வி எழுப்பினார்.