சினிமா பிரபலங்கள் என்றால் அவர்கள், நடை உடை பாவனை என்று அனைத்துமே சாதாரண பொதுமக்கள் பார்வைக்கு சற்று வித்தியாசமாகவே காட்சி அளிக்கும்.

அதே போல அவர்களின் பிரமாண்டத்தை அவர்கள் பிள்ளைகள் மீதும் திணித்து அவர்களுடைய பிரதிபலிப்பு, பிள்ளைகளிடமும் இருக்கும்.

இது நாள் வரை அப்படி ஒரு தோற்றத்தை தான் நாமும் பார்த்து வருகிரோம். ஆனால் இப்படிப்பட்ட நடிகைகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆன இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் சிங்கார சென்னைக்கே வந்தார். 

இந்நிலையில் சமீபத்தில், தன்னுடைய மகளுடன் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்... இந்த நிகழ்ச்சியில் அவரையும் அவரது மாலையும் பார்த்தவர்கள் ஒரு நிமிடம் ஆடி போயினர்.

காரணம் அவரது மகள், மிகவும் எளிமையாக ஒரு சாதாரண ஆடை அணிந்திருந்தார், மேலும் தலையில் எண்ணெய் வைத்து அழுத்தி தலைசீவி கூலி வேலைசெய்பவர்கள் மகள் சாதாரணமாகவே காட்சியளித்தார்.

இதுகுறித்து கஸ்தூரி பேசும் போது, என் மகளுக்கு நான் தேவையானதை மட்டுமே வாங்கி தருகிறேன், பிரபலத்தின் பெண் என அவர் பிரதிபலிக்க தேவை இல்லை. அவள் சாதாரண பெண் என்கிற எண்ணம் மட்டுமே அவளுக்கு இருக்க வேண்டும் என நினைப்பதாக கஸ்தூரி தெரிவித்தார்.