80 , மற்றும் 90  களில் முன்னணி நடிகராக இருந்த கேப்டன் விஜயகாந்த், நடிப்பையும் தாண்டி சிறந்த அரசியல் வாதியாகவும் திகழ்ந்தவர். இவரை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இவருடைய குழந்தை மனசு பற்றி நன்றாகவே தெரியும். 

இந்நிலையில் நடிகை கஸ்தூரி முதல் முறையாக விஜயகாந்த் பற்றி யாரும் வெளியிடாத தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்ன என்று கேட்டல் நீங்களே ஆச்சர்யத்தில் மூழ்கி விடுவீர்கள் இப்படியும் ஒரு நடிகர் இருக்க முடியுமா? என்று.

நடிகை கஸ்துரியிடம், கேப்டன் விஜயகாந்த் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி, விஜயகாந்த் பொறுத்தவரை அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல உதவிகள் செய்துள்ளார். ரொம்ப தாராள மனசு காரார். சில சமயங்களில் தயாரிப்பாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் சம்பளத்தை கூட அவர் வாங்காமல் விட்டுவிடுவார்.  அவரிடம் யாராவது உதவி என்று கேட்டல் அவர்களை ஒருநாளும் வெறும் கையேடு அவர் அனுப்பியதே இல்லை என இது வரை யாருக்கும் தெரியாத சில தகவல்களை கஸ்தூரி கூறியுள்ளார்.

கொஞ்சம் பிரபலமாகி விட்டாலே தங்களுடைய சம்பள பணத்தை இழக்க மனம் இல்லாத நடிகர்கள் மத்தியில், முன்னணி நடிகராக இவர் இருக்கும்போதே சம்பளத்தை கூட எதிர்பார்க்காமல் இவர் நடித்துள்ளது உண்மையில் இவரின் பெரிய மனதை காட்டு கிறது என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.