இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வரும் திரைப்படம் 'கசடதபற'. இந்த படத்தின் வித்யாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தை வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக தயாரித்து வருகிறார் வெங்கட் பிரபு. மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,  இந்த படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள் ஆறு ஒளிப்பதிவாளர்கள் ஆறு எடிட்டர்கள் பணியாற்றுகிறார்கள்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக்கில் மூன்று கதாநாயகர்கள், மற்றும் மூன்று கதாநாயகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. அதன்படி இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு, ஆகியோர் ஹீரோவாக நடிக்கின்றனர்.

நடிகை ரெஜினா,  ப்ரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். மேலும் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோரின் புகைப்படங்களும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர்கள் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. பர்ஸ்ட் லுக்கில் பின்னர்  சர்ச், கோவில், பெரிய பெரிய கட்டிடங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளது.  ஆறு கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.