தமிழ் சினிமாவில் இதுவரை ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து வந்த 'கருப்பன்' புகழ் நடிகை தான்யாவின் திடீர் கிளாமர் அவதாரம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்துடன் சசிகுமாரின் பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் தான்யா. 

தொடர்ந்து, அருள்நிதியுடன் 'பிருந்தாவனம்', விஜய் சேதுபதியுடன் 'கருப்பன்' ஆகிய படங்களில் 'குடும்ப குத்துவிளக்காக' நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். 


இதில், கருப்பன் படத்தில் கிராமத்து பெண்ணாக சேலை கட்டி விஜய் சேதுபதியுடன் ரொமான்டிக்காக நடித்திருந்த தான்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

 அந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'கருவா கருவா பயலே' பாடல், இன்னமும் பலரது ஃபேவரைட் பாடல் லிஸ்ட்டாக உள்ளது. 
என்னதான் அழகு, திறமையிருந்தாலும் பார்ப்பதற்கும் ஹோம்லி லுக்கில் இருப்பதால் என்னவோ, தான்யாவை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. 

இதனால், விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தப் பிறகு பல வாய்ப்புகள் தேடி வரும் என எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்த தான்யா, தற்போது தனது ரூட்டை கிளாமர் பக்கம் திருப்பியுள்ளார். 

அவ்வப்போது, தனது சமூக வலைதள பக்கங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு அசரடிக்கும் அவர், தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம செக்ஸியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 


வெறும் சட்டை மட்டுமே அணிந்து, தான்யா கொடுத்திருக்கும் இந்த போஸ், ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. 

அவரது செக்ஸியான புகைப்படத்தை பார்த்த பலரும் லைக்ஸை அள்ளி வீசிவருவதுடன், குடும்ப குத்துவிளக்கு தான்யாவா இது! என ரசிகர்கள் பலர் ஆச்சரியத்தில் வாயடைத்து போயுள்ளனர். தற்போது சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக தான்யா கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.