நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் நடிகர் கருணாசும் , ரித்தீஷும் மோதிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் சங்கம் ராதாரவி , சரத்குமார் தலைமையில் இயங்கியது. அதற்கு தேர்தல் வந்த போது அதிமுக தரப்பு ராதாரவி , சரத்குமாரை கைவிட்டது. ரித்தீஸ் சார்பில் ஏராளமானோர் இறங்கி வேலை செய்தனர். மறுபுறம் கருணாஸ் , உதய நிதி ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்ததால் விஷால் அணி எளிதாக வென்றது.

அதன் பின்னரும் ராதாரவி , சரத் குமாருடன் மோதல் போக்கை கடைபிடித்த விஷால் அணி தொடர்ந்து பரபரப்பான செயல்பாட்டிலேயே ஈடுபட்டு வந்தது. மறுபுறம் தனக்கு பெரிதும் உதவிய ரித்தீஷை அலட்சியப்படுத்தியதால் அவர் ஓரம் ஒதுங்கினார்.

திமுகவுடன் அதிக நெருக்கம் காட்டுவதால் அதிமுக தலைமையும் விஷால் அணியை ஒதுக்கியது. நடிகர் சங்க செயல்பாட்டில் விஷால் ஏதேச்சதிகாரமாக இயங்குவதாக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி உள்ளது. குறிப்பாக ரித்தீஷ் நாசர் மத்தியில் இந்த எண்ணம் உள்ளது. 

நாசர் எதுவும் எதிர்ப்பு காட்டாமல் அனுசரித்து போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ரித்தீஷ் நேரடியாக எதிர்ப்பை காட்டதுவங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. இதில் ரித்தீஷும் , கருணாசும் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதில் மற்றவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் இந்த பிரச்சனையும் இன்று பொதுக்குழுவில் எழுப்பப்படும் என தெரிகிறது.