அட லூசுப்பசங்களா ரஜினிகூட ஏற்கெனவே நடிச்சு முடிச்சிட்டேண்டா... எனக்கு இது புதுசு இல்ல. ஏண்டா முட்டாள்தனத்தை நிரூபிக்கிறீங்க என குஷ்பு கொதித்தெழுந்துள்ளார். 

சரி ஏன் இப்படிக் கொதிக்கிறார் குஷ்பு..? '’ஒரு பெண்ணை நடத்தை கெட்டவள் என பரப்பிவிட்டு, அவள் நல்லவள் என்று தெறிந்ததும் இல்லை இல்லை நான் சொல்வதுதான் சரி, அவள் அப்படித்தான் என்று வாதிடுவது போல் உள்ளது உங்கள் வாதம்.. சரியின் பக்கம் நிற்க்க கற்றுக்கொள்ளுங்கள்’’என முன்பு குஷ்பு போட்ட ட்விட்டுக்கு கருத்து தெரிவித்து இருந்தார் ஒருவர்.

 

அதற்கு பதிலளித்த குஷ்பு, ‘’நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றி உதாரணத்துக்கு கூறுவது பொருத்தமற்றது மற்றும் வெட்கக்கேடானது. ஒரு ஆண் கேரக்டரை கூற முடியாதா? சிறந்த தலைவரான கலைஞர் படத்தை உங்கள் சமூகவலைதள பக்கத்தில் முகப்பு புகைப்படமாக வைத்துக் கொண்டு இப்படிக் கேட்பது இன்னும் வெட்கக்கேடானது’எனக் கொந்தளித்து விட்டார் குஷ்பு. 

சரி, கருணாநிதியின் விசுவாசி ஏன் குஷ்பு மீது கோபப்பட்டார்..? எட்வின் ராஜ்குமார் என்பவர், தமிழக காங்கிரஸ் ரஜினிமீது  மென்மைப்போக்கை கடைப்டிக்கிறது என தெரிவித்து இருந்தார். அதற்கு குஷ்பு, இங்கே ஏன் காங்கிரஸ் கட்சியை கொண்டு வருகிறீர்கள்? உங்கள் மூளை ஓவர் டைம் வேலை செய்வதாக நினைக்கிறேன் எனத் தெரிவித்து இருந்தார்.

 

வெங்கடேஷ் என்றொருவர், ‘’ராமசாமி பற்றி அசிங்கமாக பேச பேப்பர் எல்லாம் தேவையில்லை.’’எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பெரியாரை பின்பற்றுபவள்’’எனக் கூறி இருந்தார். 

அதற்கு முந்தைய ட்விட்டில், '’உங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது உங்களுடைய ஜனநாயக உரிமை ரஜினிகாந்த் சார். அதில் தவறு இல்லை. அவர் ஒரு நிலைப்பாடு எடுப்பதை நான் பாராட்டுகிறேன். அவர் சொன்னது சரி அல்லது தவறு என்று நான் தீர்மானிக்கவில்லை. பயமின்றி பேசுவது முக்கியம், அவர் அதை தான் செய்கிறார். நல்லவராக இருக்கும் ஒருவர் அரசியல் ரீதியாக சரியாக இருக்க முடியாது’’ எனத் தெரிவித்து இருந்தார். 

இது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பிய ஓருவர் ‘’நீங்கள் அவருடன் சேர்ந்து நடிப்பதால் பொய்களுக்கு ஆதரவு தருகிறீர்கள்.  இது உங்களுக்கு அவமானம்! இந்த அறிக்கை கூட எனது சொந்த கருத்து! பல பத்திரிகைகள் கூட கலாச்சாரத்தை, நடத்தையை தவறாக சித்தரித்தன! ’’எனத் தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, ‘’இன்னும் அதையே சொல்லுங்கள் ..  நான் சொன்னதை நன்றாகப் படியுங்கள் .. சரி அல்லது தவறு. இது உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று நான் நினைக்கிறேன் .. நான் அவருடன் 28 வருடங்கள் கழித்து நடித்தேன், எனவே இப்போது புதியது என்ன? உங்கள் மனநிலையைத் தூண்டுகிறது, அதுதான் பிரச்சினை’’எனப்பதிலடி கொடுத்துள்ளார். 

 

சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படத்தில் ரஜியுடன் குஷ்பு நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பெரியார் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இந்த விவகாரத்தில் குஷ்புவை இழுக்கப்பார்க்கிறார்கள் நெட்டிசன்கள்.