'பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகளும் புகைப்படங்கள் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அரங்கேற்றி,பெண்களை சீரழித்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்காமல், நீதிமன்றம் அவர்களுக்கு இரண்டே நாளில் ஜாமீன் கொடுத்துள்ளது.

இதற்கு பொதுமக்கள், அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே நடிகர் சித்தார்த், ஜிவி பிரகாஷ், உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில்.

தற்போது இயக்குனரும், நடிகருமான,  கரு.பழனியப்பன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து கொந்தளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  'பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு  விடிவு இல்லை . என்று பதிவிட்டுள்ளார். 

 

இயக்குனர் கரு.பழனியப்பனின் இந்த டுவீட்டுக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.