தமிழ் சினிமாவில் நீண்டஇடைவெளிக்கு பின் ஒரு கண்ணியமான படம் என்று சொன்னால் அது கடைக்குட்டி சிங்கம் என்று மார்தட்டி சொல்லலாம். எந்தவித ஆபாசம் இல்லாமல் குடும்பத்தோடு கட்டாயம் பார்க்கவேண்டிய படம். பாசம், கூட்டு குடும்பம் எல்லாம் அழிந்து போகும் காலத்துக்கு இது ஒரு முட்டுக்கட்டை என்றும் சொல்லலாம்.
ஒரு தரமான படம் என்று தான் சொல்லலனும். காரணம் எல்லா விஷயங்களை அளவோடு அழகா சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

 

படம் ஆரம்பித்தது முதல் கடைசி காட்சி வரை மக்களுக்கு தேவையான விஷயங்களையும் படத்தின் கதைக்கு தேவையான பாதையை விட்டு நகராமல் மிக சிறப்பாக எல்லா விஷயங்களும் இதில்  எதார்த்தமாக கூறியுள்ளார்.

விவசாயம்… விவசாயம் என்று சும்மா கூவாமல் அதை உணர்வு பூர்வமாக கூறியிருக்கிறார். இயக்குனர் பாண்டிராஜ் அதோடு ஜல்லிக்கட்டு ரேக்ளா ரேஸ் கிராம வாழ்கை என மிக அழகாக படம் பிடித்துள்ளார். படத்தில் துணை நடிகர்களைவிட முக்கிய நடிகர்கள் அதிகம் காரணம் கதையின் அம்சம் என்று தான் சொல்லணும் ஒரு கூட்டு குடும்பத்தின் அத்தனை உறவு முறைகள் அந்த பந்தத்தை அனைவரும்  உணர்ந்து வெளிபடுத்தியுள்ளார்கள்
படத்தில் நடித்த அனைவரும் நான் நீ என்று போட்டி போட்டு நடித்துள்ளனர். அதோடு சரியான கதாபாத்திர தேர்வுகள், அதுக்கும் இயக்குனருக்கு ஒரு பாராட்டு கொடுக்கணும் ஒரு கிராமத்து கதை எழுதுவதோடு அதற்கு சரியான திரைகதை அமைந்தால் தான் அந்த படம் வெற்றிப் படமாக அமையும். அந்த வகையில் இந்த படத்தில் எல்லா அம்சங்களையும் மிக தெளிவாக படம் பிடித்துள்ளார் இயக்குனர்.

கார்த்திக்கிற்கு  இப்படி ஒரு மாமன், இப்படி ஒரு மகன், இப்படி ஒரு அண்ணன்,  இப்படி ஒரு தம்பி நமக்கு கிடைப்பானா என்று ஏங்க வைக்கும் ஒரு கதாபத்திரம். கதைக்கு என்ன தேவையோ அதை புரிந்து மிக அற்புதமான ஒரு நடிப்பை வழங்கியுள்ளார்  கார்த்தி.
ஒரு யதார்த்தமான ஹீரோ எந்த கதை என்ன தேவையோ அந்த கதைக்கு தன்னை மாற்றி கொள்ளும் திறமை இவரிடம் அதிகம்.  அதுவே இவரின் வெற்றி. இவர் நடித்த கிராம படங்கள் எல்லாமே மிக பெரிய வெற்றி. அந்த வகையில் கார்த்திக்கு இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமையும்.

கார்த்தி நடிப்பில் இந்த படத்தில் ஒரு படி மேல் என்று தான் சொல்லணும் விவசாயத்தை பற்றி கல்லூரியில் பேசும் போதும் சரி கிளைமாக்ஸ் காட்சிகளும் எங்கு தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று போராடும் போதும் சரி அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் இந்த கதைக்கு மிக பெரிய பலம் வசனம் அந்த வசனங்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசி உயிர் கொடுத்து இருக்கிறார் .

சத்யராஜ் சொல்லவா வேணும் !! அடேங்கப்பா இரண்டு கதாபாத்திரம் இளமை சத்யராஜ் அப்பா சத்யராஜ் இரண்டிலும் சும்மா விளையாடி இருக்கிறார் இளமை கதாபாத்திரத்தில் வில்லன் கலந்த ஒரு தோற்றம் மகன் தான் வேணும் அதற்கு என்ன வேணும் என்றாலும் செய்வேன் எத்தனை திருமணம் வேண்டும் என்றாலும் செய்வேன் என்ற ஒரு பாத்திரம் அப்பா வேடம் பொறாமை பட வைக்கும் ஒரு பாத்திரம்.

கார்த்தியின் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர் மற்றும் பானுப்ரியா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் அதோடு மகனுக்காக சண்டை போடும் விஜி நடிப்பில் ஒரு படி மேலே நிற்கிறார். பானுப்ரியா என் மகள் வயதில் பிறந்த பொண்ணோட பொன்னை தான் திருமணம் செய்யவேண்டும் என்கிற வீம்பு மேலும் அழகு அழுத்தம்
ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் அக்காவா வரும் மோனிகா, யுவராணி,தீபா,ஜீவித கிருஷ்ணன் மாமன்களாக வரும் இளவரசு, சரவணன், ஸ்ரீமன் , மாரிமுத்து மாமனாராக வரும் பொன்வண்ணன் கணக்கு பிள்ளையாக வரும் மனோஜ்குமார் மற்றும் மனோபால சௌந்தராஜன், எல்லோரும் தன் நடிப்பில் அனைவரையும் மிரட்டியுள்ளனர்.