‘பேட்ட’ படத்தில் ரஜினியோடு நடித்திருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை எஸ்.பி.கஜராஜ் ரஜினி ரசிகர். இவர் ஏற்கனவே ‘கபாலி’யிலும் நடித்திருக்கிறார். 

ரஜினி சாரோடு நடிப்பதென்பது, இறைவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்னா எவ்வளவோ பேர் சினிமாவுக்கு வர்றாங்க. அப்படி வர்றவங்களுக்கு ரஜினி சாருடன் ஒரு படமாவது பண்ணமாட்டோமா என்ற ஏக்கம் இருக்கும்.  அந்த ஏக்கத்தை ‘கபாலி’யை தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பாக சூப்பர்ஸ்டாரோடு ‘பேட்ட’ வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த மிகப் பெரிய கிஃப்ட். ஏற்கனவே என் மகன் இயக்கத்தில் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி சாரை வைத்து இயக்கும் படத்தில் நடிப்பது கூடுதல் மகிழ்ச்சி” என்று கூறினார். “ரஜினி சாருக்கு நான் ரசிகன் என்றால் என் பையன் வெறியன். கார்த்திக் சிறுவனாக இருந்த சமயத்திலிருந்து அவனுக்கு ரஜினி படம் தான் காண்பிப்பேன் என்றார்.

மேலும், தலைவர் படம் என்றால் குறைந்தது ஐந்து முறையாவது பார்த்துவிடுவேன். முதல் முறை நண்பர்களுடன் பார்ப்பேன். பிறகு என் குடும்பத்துடன் பார்ப்பேன். பிறகு எப்போதெல்லாம் நேரம்  கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பார்ப்பேன். கடைசியா தியேட்டரை விட்டு படம் எப்போது எடுக்கிறார்களோ அது வரை பார்ப்பேன் எனக் கூறினார். ஒருமுறை ‘தங்க மகன்’ படம் ஓடும்போது தியேட்டரில் ஒரு ஷோ எடுத்து உறவினர்களுக்கு காட்டினேன் என தான் எவ்வளவு பெரிய ரசிகன் என வெளிப்படுத்தியுள்ளார்.