தன்னை வைத்துப் படம் இயக்குவதாக இருந்த கார்த்திக் சுப்பாராஜின் மனதை மாற்றி, இளைய மருமகன் விசாகனை வைத்து இயக்கும்படி திசைதிருப்பி விட்டதால் மாமனார் ரஜினி மீது தனுஷ் செம காண்டில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ரஜினியின் இளைய மருமகன் விசாகன் தொழிலதிபர் என்பதையும் தாண்டி சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தொழில் மட்டுமின்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அப்படங்கள் அவருக்கு எவ்வித அடையாளத்தையும் ஏற்படுத்தித்தரவில்லை.

இந்நிலையில் மனைவி சவுந்தர்யா மூலம் தனுஷை வைத்துப் படம் இயக்க இருந்த கார்த்திக் சுப்பாராஜைக் கைப்பற்ற நினைத்த விசாகனுக்கு ரஜினி கிரீன் சிக்னல் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. மிக விரைவில் தனுஷை வைத்துப் படம் இயக்க தயாராகி வந்த கார்த்திக் சுப்பாராஜ் தற்போது தனது உதவியாளர்களுடன் அமர்ந்து அவசர அவசரமாக விசாகனுக்கு கதை தயார் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு மெல்லவும் முடியாமல் வெளியே சொல்லவும் முடியாமல் தவித்துவருகிறார் தனுஷ்.