‘பேட்ட’ ஓப்பனிங் டல்லாக இருந்ததற்கு பா.ரஞ்சித்தான் காரணம்’...கார்த்திக் சுப்பாராஜ் அபாண்டம்...

First Published 11, Jan 2019, 4:50 PM IST
karthik subbaraj blames pa.ranjith
Highlights

’விஸ்வாசம்’ படத்துக்கு அஜீத்துக்கு இருந்ததை விட ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஓபனிங் குறைவாக இருந்ததற்கு அவரது முந்தைய படங்கள்தான் காரணம்’ என்று பயங்கர அபாண்டமான குற்றச்சாட்டை இயக்குநர் பா.ரஞ்சித் மீது சுமத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

‘பேட்ட’ படத்தின் முதல்நாள் வசூல்நாள் ‘விஸ்வாசத்தை விட கம்மியாக இருந்ததை திரைத்துறையைச் சேர்ந்த பலரும் பகிர்ந்துள்ளனர். அஜித்தின் படம் தமிழகம் முழுக்க ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய நிலையில், ரஜினியின் பேட்ட தியேட்டர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் காற்று வாங்கின. அந்த அதிர்ச்சி செய்தியை ஜீரணிக்க முடியாமல் அமெரிக்காவிலிருந்து நேற்று இரவு ரஜினி அவசர அவசரமாக சென்னை பறந்துவந்தார்.

படம் இரண்டாவது இடத்துக்கு சென்றதற்குப் பலரும் பல காரணங்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், ’மாஸ் ஆக இருந்த ரஜினியை வேறு ஜானருக்கு மாற்றி ‘ஸ்டைலுக்கு பேர் போன அவரின் நடையை முந்தைய படங்களில் மாற்றி அவரை மார்க்கெட் இழக்கவைத்துவிட்டார்கள்’ என்று ஒரு வட இந்திய இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் புலம்பியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

கார்த்திக்கின் பேட்டியில் குறிப்பிடப்பட்ட அந்த முந்தைய படங்கள் ‘கபாலி’யும் , ‘காலா’வும் தான் என்பது மிகத்தெளிவாக இருக்கிறது. அந்தப் பேட்டியைப் படித்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித் கார்த்திக் சுப்பாராஜ் மீது கடும்கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

loader