Karthik and Gautham Karthik acting in a single movei title released
கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து அப்பா, மகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
குடும்பத்தில் இரண்டு நடிகர்கள் இருந்தாலும், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது சிரமமான காரியம்தான். அதுவும், கணவன் மற்றும் மனைவி, அப்பா மற்றும் மகன்/மகள் உறவாக இருந்துவிட்டால், ஒன்றாக நடிக்கவே மாட்டார்கள்.
அப்படியே நடித்தாலும், நிஜ உறவைப் போன்ற கதாபாத்திரத்தில் நிச்சயம் நடிக்க மாட்டார்கள். அப்படி தான் இதுவரை தமிழ் சினிமா கண்டுள்ளது.
இதற்குமுன் சிவாஜி மற்றும் பிரபு பல படங்களில் தந்தை மகனாக நடித்துள்ளனர். அதன் பிறகு தற்போது கார்த்தியும், கௌதம் கார்த்தியும் ஒரு படத்தில் அப்பா மகனாக நடிக்க உள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஆம். “மிஸ்டர் சந்திரமௌலி” என்பதுதான் அந்தப் படத்தின் தலைப்பு. எங்கேயே கேட்டதுபோல இருக்கா? இருக்கணுமே. கார்த்திக்கின் ஃபேமஸ் வசனம் தான் அது.
இந்த தலைப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படத்தை திரு இயக்குகிறார். படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார்.
படத்தில் கார்த்திக் அரசு அதிகாரியாகவும், கௌதம் கார்த்திக் பாக்ஸராகவும் நடிக்கின்றனர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பா மற்றும் மகன் கதையாக உருவாகவுள்ளது. தற்போது கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.
