Karthigai Deepam Rohini Pregnant after 3 years : கார்த்திகை தீபம் சீரியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரோகினி இப்போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக் கேட்டு மயில்வாகனம் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Karthigai Deepam Rohini Pregnant after 3 years : ஜீ5 தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது கார்த்திகை தீபம் சீரியல் தான். முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது 2ஆவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ரேவதி மற்றும் ராஜா (கார்த்திக்) இருவருக்கும் திருமணம் நடந்த பிறகு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளும் ராஜாவிற்கு வருகிறது. ரோகினிக்கு இரத்தம் ஏற்பாடு செய்வது, ஸ்வாதியை காப்பாற்றுவது, சாமுண்டீஸ்வரிக்கு பக்க பலமாக இருப்பது வரை எல்லாமே ராஜா தான்.
ஆரம்பத்தில் ராஜாவை வெறுத்த ரேவதி இப்போது அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார. உண்மையில் ராஜாதான் பாட்டியின் பேரனா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமின்றி இந்த வாரத்திலிருந்து தீபாவின் அம்மா மற்றும் அண்ணி கதாபாத்திரங்கள் சீரியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் என்ன டுவிஸ்ட் என்றால் ராஜாவின் மாமியார் வீட்டிற்கே வந்து அவர்களிடம் வேலை கேட்பது தான். அதுமட்டுமின்றி செங்கல் சோலையில் அவர்களுக்கு வேலை கொடுப்பதாக சாமூண்டீஸ்வரியும் வாக்குறுதி அளித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க ரொம்ப வருடங்களுக்கு பிறகு சாமூண்டீஸ்வரியின் மூத்த மகள் ரோகிணி இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அப்பாவான சந்தோஷத்தில் மயில்வாகனம் இருக்கிறார்.
தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அம்மாவிடம் சொல்ல ஆசையாக வீட்டிற்கு வரும் ரோகினி அம்மா பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். தனது வரட்டு கௌரவம் முக்கியமா, மகளின் சந்தோஷம் முக்கியமா என்று கேட்டால் எல்லோருமே மகளின் சந்தோஷம் தான் முக்கியம் என்பார்கள். ஆனால், சாமுண்டீஸ்வரி தனது மாமியார் குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இத்தனை ஆண்டுகளாக அவர்களுடன் பேசவில்லை. இனிமேலும் பேச போவதில்லை என்று பிடிவாதமாக இருக்கிறார். நாளுக்கு நாள் கார்த்திகை தீபம் சுவாரஸ்யமான காட்சிகளுடன் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அம்மா இப்படி சொல்லியதால் கர்ப்பமாக இருப்பதை ரோகிணியும், மயில் வாகனமும் மறைக்கின்றனர். இதைத் தொடர்ந்து ராஜா இதுவரையில் சாமுண்டீஸ்வரி, மயில் வாகனம், ரோகிணி, ரேவதி, சுவாதி என்று எலோரையும் காப்பாற்றியதைத் தொடர்ந்து அடுத்து துர்காவையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்படி என்றால் துர்காவை பெண் கேட்டு ஒரு குடும்பத்தினர் வருகின்றனர். ஆனால், அவர்கள் சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பம்.
சாமுண்டீஸ்வரியோ இந்த சம்பந்தத்திற்கு ஓகே சொல்ல, துர்கா தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மறுக்கிறார். அவர் தன்னையே அறியாமல் நவீனை காதலிக்க தொடங்கியதால் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால், சந்திரலேகாவை சாமுண்டீஸ்வரி ஏற்றிவிட அவரும் இந்த திருமணத்திற்கு ஓகே சொல்கிறார். இப்படி டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வச்சு கார்த்திகை தீபம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எப்போதுதான் சாமுண்டீஸ்வரி அவரது மாமியார் குடும்பத்தோடு ஒன்று சேர்வார் என்ற எதிர்பார்ப்பும், ரேவதிக்கு எப்போது தனது கணவர் ராஜாவைப் பற்றி தெரியவரும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது.
