Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் அம்மனுக்கு சாற்றப்பட இருந்த கோயில் நகைகளை விருமன் திருடிச் சென்ற நிலையில் கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
Karthigai Deepam 2 Serial Today Episode : ஜீ5 தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் கார்த்திகை தீபம் 2 சீரியலு ஒன்று. முதல் சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு பிறகு தற்போது கார்த்திகை தீபம் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கார்த்திக் மட்டுமின்றி சாமுண்டீஸ்வரியின் மகள்கள் என்று அனைவரும் கும்பாபிஷேகத்திற்காக பாட்டி ஊருக்கு வந்துள்ளனர். இதில் முதல் நிகழ்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், விருமன் விஷம் கலக்க, அதனை தெரிந்து கொண்ட கார்த்திக் விஷ பாட்டிலுக்கு பதிலாக தேன் பாட்டிலை வைத்து ஊர் மக்களை காப்பாற்றினார்.
அடுத்ததாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ரேவதி தலையில் வைத்திருந்த முளைப்பாரி தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. அப்போது கூட வேறொரு முளைப்பாரி எடுத்து வந்து கார்த்திக் கொடுத்தார். முளைப்பாரி ஊர்வலம் நன்றாக நடந்து கும்மிப் பாட்டும் படிக்கப்பட்டது. இதையடுத்து கோயில் நகையை எடுத்து செல்லும் ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இதற்காக பாட்டி தனது பழைய வீட்டில் உள்ள பீரோவில் சாமி நகைகளை வைத்திருந்தார். அது எப்படியோ தெரிந்து கொண்ட விருமன் அந்த நகையை எடுக்க ஒரு திருடனை வீட்டிற்குள் அனுப்பி வைத்து சாமி நகைகளை எடுத்து சென்றுள்ளார். திருடன் நகைகளை திருடும் போது வீட்டிற்குள் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது எழுந்து சென்று பார்த்த கார்த்திக் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட மறுபடியும் வந்து படுத்து தூங்கியுள்ளார்
அடுத்த நாள் ஊர்க்காரர்கள் அனைவுரும் ஒன்றாக வந்து கோயில் நகைகளை ஊர்வலமாக கொண்டு சென்று சாமிக்கு சாற்றுவது வழக்கம். அதற்காக எல்லாம் தயாராக இருக்கும் போது பாட்டி சாமி நகையை எடுக்க சென்ற போது நகை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிலுள்ள அனைவரும் சாமி நகை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விருமனின் பிளான் படி கும்பாபிஷேகம் நின்றுவிடுமா அல்லது கார்த்திக் அதற்கு மாற்று ஏற்பாடு செய்திருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் இன்றைய எபிசோடில் நாம் காணலாம். இது ஒரு புறம் இருக்க, கார்த்திக்கின் அம்மாவை சந்திரலேகா கடத்திவிட்டார்.
இப்போது கார்த்திக் அவரது அம்மாவை காப்பாற்றுவாரா அல்லது கோயில் நகைகளை கண்டுபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
