Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் பாட்டிக்காக குறி கேட்ட ரேவதிக்கு இரட்டை குழந்தை பிறக்க போகிறது என்ற சந்தோஷமான செய்தியை கூறியிருக்கிறார். இதைப் பற்றி பார்க்கலாம்.
Karthigai Deepam 2 : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் ஆசைப்பட்ட மாதிரியே கோயில் கும்பாபிஷேகமும் தொடங்கிவிட்டது. இதில் ராஜராஜன் தனது குடும்பத்தோடு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். ஆனால், சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரலேகா இருவரும் மட்டும் அடுத்தநாள் வருவதாக கூறிவிட்டனர்.
அன்னதான சாப்பாட்டில் விஷல் கலந்த விருமன்
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கார்த்திக்கின் பாட்டி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அதனை தனது மகனும், பேரன் மற்றும் பேத்திகள் தான் பரிமாறுவார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை பரிமாறவும் நேரம் வந்தது. இதில் ரேவதி, ரோகிணி, மயில்வாகனம், சுவாதி, ராஜராஜன் என்று எல்லோருமே பரிமாறினார்கள். ஆனால், ஊர்க்காரர்கள் யாரும் சாப்பிடவில்லை. இதற்கு காரணம், அன்னதான சாப்பாடு முதலில் பூஜைக்கு பிறகு காகத்திற்கு படைக்கப்பட்டது.
காகம் இறந்தது எப்படி
அந்த சாப்பாட்டை சாப்பிட்டு காகம் இறந்ததாக கூற, ஊர் பொதுமக்கள் சாப்பிட உட்கார்ந்த இடத்திலிருந்து சாப்பிடாமல் எழுந்தனர். உண்மையில் காகம் கரண்ட் ஷாக் அடித்து இறந்தது என்று தெரியவந்தது. கார்த்திக் முதலில் இந்த சாப்பாட்டில் விஷம் இல்லை என்பதை சாப்பிட்டு நிரூபிக்கிறேன் என்று சாப்பிட்டார். அவருக்கு எதுவும் ஆகவில்லை. ஒருவேளை விஷம் கலந்திருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
குடும்பத்தோடு அன்னதானம் சாப்பிட்ட ரேவதி
இதே போன்று ரேவதியும் நாங்களும் சாப்பிடுகிறோம் என்று ரேவதி, பாட்டி, சுவாதி, ராஜராஜன், தங்கமயில், ரோகிணி என்று எல்லோருமே அன்னதான சாப்பாட்டை சாப்பிட்டனர். அவர்களுக்கும் எதுவும் ஆகவில்லை. இதைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அன்னதான சாப்பாட்டை மகிழ்ச்ச்யோடு சாப்பிட்டனர்.
பிளாப் ஆன விருமனின் பிளான்
இதனால், அதிர்ச்சி அடைந்த விருமனைப் பார்த்து என்ன விருமா பிளான் எல்லாம் போச்சா என்று மயில் கேட்க, கார்த்திக் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தினார். முதலில் நீங்கள் இருவரும் பேசுவதை கேட்டு விஷத்திற்கு பதிலாக வேறொன்றை வைத்தோம் என்றார். என்னை பழிவாங்க என்னிடம் மட்டும் மோது, ஏன் அப்பாவி ஜனங்களோட உயிரோடு விளையாடுற என்று விருமனை கேட்கிறார். அதோடு உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அப்படி ஏதேனும் செய்தால் கும்பாபிஷேகம் நின்றுவிடுவோமோ என்று தான் யோசிக்கிறேன் என்றார்.
ஊர் பொதுமக்கள் அன்னதானம் சாப்பிட்டார்களா?
தொடர்ந்து, ஊர் பொதுமக்களும் அன்னதான சாப்பாட்டை சாப்பிட்டினர். அடுத்ததாக ரேவதி குறி கேட்டார். பொதுவாக ஜோதிடத்தில் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கும். ஒரு சிலருக்கு அதில் நம்பிக்கை இருப்பதில்லை. அப்படி தான் ரேவதிக்கும் குறி கேட்பதில் நம்பிக்கை இல்லை என்றார். ஆனால், பாட்டிக்காக ரேவதி குறி சொல்பவர்களிடம் குறி கேட்டார். அவரோ ரேவதியைப் பற்றியும், கார்த்திக்கைப் பற்றியும் எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தினார்.
குறி கேட்ட ரேவதி: இரட்டை குழந்தை பிறக்கும்
இதில், ராஜா பணக்கார வீட்டு பையன் என்றும், அவருக்கு எல்லா வித்தைகளும் தெரியும் என்ற உண்மையை குறி சொல்பவர் சொல்ல, அதனை ரேவதி நம்பவில்லை. இது தவிர மற்ற எல்லா உண்மைகளையும் குறி சொல்பவர் சொன்னார். மேலும், ரேவதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என்று இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்றார். அதைக் கேட்ட ரேவதி கற்பனையில் நினைத்துப் பார்த்தார்.
ரேவதிக்கு இரட்டை குழந்தை
தனது பேத்திக்கு இரட்டை குழந்தை பிறக்க போகிறது என்ற சந்தோஷத்தில் பாட்டி இருந்தார். உண்மையில் கார்த்திக் தான் தனது பாட்டியின் பேரன் என்பதை ரேவதி எப்போது புரிந்து கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ராமர் சிலை மீது ஆசைப்பட்ட ரேவதி
கடைசியாக குறி கேட்டு முடித்த ரேவதிக்கு ராமர் சிலை வாங்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதனை வளையம் (ரிங்) போட்டு வாங்கிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக ரூ.50 கொடுத்து 10 ரிங் வாங்கினார். முதலில் அவர் 5 ரிங் போட்டார். அதில் ஒன்று கூட சரியாகவிலவில்லை. கடைசியாக கார்த்திக் வந்து முயற்சித்தார். இதில் 4 ரிங்கும் சிலைக்கு வெளியில் விழவே கடைசியாக 5ஆவது ரிங்கை ராமர் சிலை மீது போட்டு ரேவதிக்கு அவர் ஆசைப்பட்டு கேட்ட அந்த ராமர் சிலையை வாங்கி கொடுத்தார்.
ரேவதி மற்றும் கார்த்திக்
இதனால் மகிழ்ச்சி அடைந்த ரேவதி கார்த்திக்கை கட்டியணைத்தார். இதில் மயில் சந்தோஷப்பட்டார். ஏனென்றால் என்னதான் ரேவதி கார்த்திக்கை பிடிக்காமல் திருமணம் செய்தாலும் அவர்கள் எப்படியாவது ஒன்று சேர்ந்திட வேண்டும் என்று ஆசைப்பட்டது மயில்வாகனம் தான். அதனால், அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கார்த்திகை தீபம் சீரியலின் எபிசோடு முடிந்தது. இனி வரும் திங்களன்று ஒளிபரப்பு செய்யப்படும் எபிசோடில் பாட்டியின் டூப்ளிகேட் பேரன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் அம்மாவை கடத்த பிளான் போட்ட சிவனாண்டி
அதோடு கார்த்திக்கின் அம்மாவை கடத்த சந்திரலேகா, சிவனாண்டி மற்றும் அவரது சித்தப்பா என்று எல்லோருமே பிளான் பண்ணியிருக்கிறார்கள். மேலும் பாட்டியின் ஆசைப்படியும், கார்த்திக்கி சபதத்தின்படியும் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடந்து முடிகிறதா? அல்லது ஏதேனும் பிரச்சனைகள் வருகிறதா என்று என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ர்க்கலாம்.
