மோதிக்கொள்ளும் அஜித் - ரஜினி ரசிகர்கள்! சைலண்டாக விஸ்வாசத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட' இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்!

இன்றைய தினம், கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும் தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாக உள்ளதால் இருதரப்பு ரசிகர்கள் நடுவிலும் மிகப்பெரிய பனிப்போரே நடந்து வருகிறது.

ஒரு தரப்பு ரசிகர்கள் இருவர்களுடைய படங்களை வரவேற்றாலும், மற்றொரு தரப்பினர் இருவரில் யார் பெரியவர்கள் என மோதி பார்க்கும் அளவிற்கு பிரச்சனை செய்து வருகிறார்கள். ஒரு சில இடங்களில்  அஜித் ரசிகர்கள் ரஜினிக்கு வைக்கப்பட்ட பேனர்களை கிழித்தும், ரஜினி ரசிகர்கள் அஜித்தின் பேனர்களை கிழிக்கும் சம்பவங்களும் அரங்கேறியது.

இவர்கள் இப்படி மோதிக்கொண்டாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கார்த்தி சுப்புராஜ். அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இன்று வெளியாகியிருக்கும் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படம் வெற்றியடைய சைலண்டாக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

யார் பெரியவர் என மோதிக்கொள்ளும் ரசிகர்கள் மத்தியில், தன்னுடைய படைப்போடு இணைந்து இன்று வெளியாகும் படத்திற்கு எவ்வித வேறுபாடும் பார்க்காமல் கார்த்தி சுப்புராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளது அவருடைய பெருந்தன்மையை காட்டுவதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். 

 

மேலும் 'விஸ்வாசம்' மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்களும் சம அளவில் ரசிகர்களின் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பொங்கல் தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதால் வரும் நாட்களில் இரண்டு படங்களுக்கும், நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.