karthi wished to make film with surya
சூர்யாவை வைத்து படம் எடுக்கும் ஐடியா இருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த 16-ஆம் தேதி வெளிவந்த ப்டம் தீரன். இப்படம் எதிர்பார்த்தது போலவே வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. இதில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் கார்த்தி.
மெட்ராஸ் படத்தின் 2-ஆம் பாகம் பற்றி கேட்ட கேள்விக்கு "அதுபற்றி எந்த திட்டமும் இல்லை. ஆனால், நானும், இயக்குனர் பா.ரஞ்சித்தும் இது பற்றி திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், இப்படம் இப்போதைக்கு இல்லை" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் நடிப்பது பற்றி கேட்ட கேள்விகு, "சூர்யா வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. மேலும், அவருடன் இணைந்து நடிக்கவும் ஆசை இருக்கு. ஆனால், அதற்காக ஒரு நல்ல இயக்குநருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
மேலும், மணிரத்னம் குறித்து கேட்ட கேள்விக்கு, "ஆயுத எழுத்து படத்தின் மூலம் மணிரத்னத்திடம் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். இப்போதும் அவர் அறிமுக இயக்குனர் போன்று தான் பணியாற்றுகிறார்" என்று அவர் தெரிவித்தார்.
